நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் வினவியுள்ளார்.
அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை நேற்று (14) சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து உரையாடி ஆசி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது.
நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம்.
எனவே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினேன்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.”என்று கூறியுள்ளார்.