இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டெங்குவை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையிலே சுகாதார அதிகாரிகள் இவ்வாறு மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,057 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 6,910 க்கும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது மாகாண வாரியாக அதிகபட்சமான எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.