Search
Close this search box.
இராணுவத்தினர் வசிப்பதற்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம்.

நாட்டின் இறைமையைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த, யுத்த செயற்பாடுகளில் கடமையாற்றிய முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளை நிபந்தனையின்றியும் கட்டணங்கள் இல்லாமலும் முழுமையான உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அச்சமின்றி மக்கள் நடமாடுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்புத் தரப்பினருக்கு தாய்நாட்டில் காணித் துண்டு ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால், எண். PS/CM/APL/267/2024 மற்றும் 13-05-2024 திகதியிடப்பட்ட, இராணுவ வீரர்களுக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு முழுமையான சலுகைகளை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் எண்.அமப/24/0898/601/058 மற்றும் 05/23/2024 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, இராணுவத்தினருக்கு பின்வரும் சலுகைகள் உரிமையாகும்.

* முறையான தெரிவு முறையின் மூலம் தகுதி பெற்ற போதிலும் இதுவரை அபிவிருத்தி செய்யத் தவறிய அனைத்து பிரிவுப் போர் வீரர்களுக்கும் 100 ரூபா என்ற பெயரளவு வரித் தொகையின் கீழ் விசேட குத்தகையை வழங்குதல்.

* குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளின் அபிவிருத்திக்கான நிதி வசதிகளைப் பெறுவதற்கு வசதியாக, சிறப்பு குத்தகைகளின் நிபந்தனைகளை தளர்த்துதல்

* அபிவிருத்தி செய்து வரும் /அபிவிருத்தி செய்துள்ள காணிக்கு சான்றிதழ்களை இலவசமாக வழங்குதல்,

* நடுத்தர வர்க்கத்தின் கொள்முதல் விலைப் பிரிவின் கீழ் தகுதியுள்ள வதிவிட அடிப்படையில் அபிவிருத்தி செய்துள்ள நிலத்திற்கு சான்றிதழ்களை இலவசமாக வழங்குதல்,

* நிபந்தனைகளுடன் சிறப்பு சலுகைக் கடிதத்தின் விதிகளின்படி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்தல்.

* நிலஅளவை தொடர்பான அமைப்பு மற்றும் வரைபடங்களைப் பெறுவதற்கு நில அளவை திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய அளவீட்டுக் கட்டணத்திலிருந்து விலக்களித்தல்.

அனைத்துப் பிரிவு பாதுகாப்புத் தரப்பினருக்கும் சிக்கலற்ற காணியின் உரிமையை வழங்கும் இந்த தேசிய வேலைத்திட்டம் 04 மாதங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக நிபந்தனையின்றி முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 04 இடங்களில் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பொலன்னறுவை மாவட்ட நடமாடும் நிகழ்ச்சி 10-07-2024 அன்று ஹிங்குராக்கொடை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், 17-07-2024 ஆம் திகதி, சாலியபுர கஜபா படைப்பிரிவு நிலையத்திலும், 19-07-2024 ஆம் திகதி குருநாகல் விஜயபா படைப்பிரிவு நிலையத்திலும், 23-07-2024 ஆம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.

Sharing is caring

More News