எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அச்சிடுவதற்கான உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெறும் என அரசாங்க அச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தேர்தல் தொடர்பான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.