Search
Close this search box.
வாரத்திற்கு 1,700 பேர் கொரோனா நோயால் இறக்கின்றனர்

கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.

பல நாடுகளில் கொவிட் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் குறைந்துள்ளதாகவும் வைரஸைத் தொடர்ந்து பலவீனப்படுத்தத் தடுப்பூசிகளைப் பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

 

Sharing is caring

More News