மலேசியாவில் ஈப்போ நகரின் மூன்று இடங்களில் சட்டவிரோத விபச்சார நடவடிக்கைகளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் 88 வெளிநாட்டவர்களை அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விபச்சார தொழில் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் ஹோட்டல் மற்றும் இரண்டு களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 21 மற்றும் 46 வயதுக்குட்ட 78 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த 64 பேரும், வியட்நாமைச் சேர்ந்த 13 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 4 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 3 பேரும், பங்களாதேஷைச் சேர்ந்த 3 பேரும் மற்றும் இலங்கைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத் தலைநகரான ஈப்போ, தாய்லாந்து எல்லைக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் சோங்க்லாவில் உள்ள சடாவ் மாவட்டத்திலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்தவர்களின் விபச்சார நடவடிக்கைகளை தடுக்கும் இரண்டாவது பாரிய சுற்றிவளைப்பு இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய தலைநகர் மற்றும் அண்டை நாடான சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 22 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.