பல்வேறு துறைகளில் இலங்கை (Sri Lanka) மற்றும் ருமேனியாவுக்கு (Romania) இடையிலான ஒத்துழைப்பு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கிணங்க, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் விருப்பத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும், இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.