நாட்டில் ஏற்பட்டுள்ள பல சவால்களுக்கு மத்தியிலும் பரீட்சிக்களை நடத்தி காட்டியுள்ளோம் என கல்வி அமைச்சர் சுஷில் பிரேமா ஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1991 நகர சபைக்கு நான் சென்றேன். 2001 ஆம் ஆண்டுதான் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அதையும் கூட தவறாக தான் சொன்னார்கள். நகர உறுப்பினராக அதே போல கோட்டை துணை மேயராக இருந்திருக்கின்றேன்.
அதைப் போல 5 வருடங்கள் மேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தேன். எந்த விதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அதை போல 2009 ஆம் ஆண்டு 9 மாதங்கள் தான் நான் கல்வி அமைச்சராக இருந்தேன். எதுவும் பெரிதாக என்னால் செய்ய முடியவில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தேன். நாட்டில் யுத்தம் உக்கிரம நிலையில் இருந்தது. வடக்கு கிழக்கில் எந்த ஒரு பரீட்சையும் நாங்கள் நிறுத்தவில்லை.
அதே போல தீவு பிரதேசங்களில் வினாத்தாள்களில் நாங்கள் உண்மையில் கடல் படையினரின் உதவியுடன் தான் நாங்கள் கொண்டு சென்றோம். அதே போல ltte குண்டு வெடித்து கொழும்பு புறக்கோட்டையில் டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் நாங்கள் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றோம்.
இந்த முறை நான் இதனை பொறுப்பேற்கின்ற பொழுது அமைச்சரவை விலகியிருந்தது. ஜனாதிபதி கூட விலகியிருந்தார். பிரதமரின் அழைத்து அவருக்கு முன்னால் தான் நான் இதனை பொறுப்பேற்றேன். அதனை பொறுப்பேற்ற பொழுது அந்த நிறுவனத்தின் தலைவரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் செயற்பட்ட காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
5 நாட்கள், 6 நாட்கள் பெற்றோல், டீசல் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசியல் நிறுவன தலைவர்கள் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அதனுடைய நிறுவன தலைவர்கள் கூட ஒளிந்து கொண்டிருந்தார்கள். போராட்ட காரர்கள் அவருடைய நிறுவனத்துக்கு உள்ளே சென்றார்கள்.
நாங்கள் நேரடியாக இதனை கண்டோம். யாரும் இதனை பொறுப்பேற்று கொள்ள வேண்டிய இல்லாத சந்தர்ப்பத்திலே தான் இந்த அமைச்சை பொறுப்பேற்று கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் பொருளாதார பிரச்சினை, கொவிட் பிரச்சினை போன்றவற்றால் வீழ்ச்சிப்பாதையில் இருந்த கல்வியினை நாங்கள் உயர்த்தியிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.