Search
Close this search box.
அம்பாறையில் 6 மாத கர்ப்பிணி தாயொருவர் மாயம்

அம்பாறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 6 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த (09) திகதி முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி காலை பத்து மணியளவில் தனது மகளுடன் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்ற அவர், பின்னர் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி மகளை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின்னர் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்த போதும், அவர்  வீட்டிற்கு வரவில்லை என காணாமல்போயுள்ள பெண்ணின் கணவர் மாதம்பிட்டிய (10) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் கர்ப்பிணி பெண் தனது கணவரிடம் வயிற்றில் உள்ள குழந்தையை அகற்றுமாறு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News