யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா உயிரிழந்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி (29.06.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்ஞையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது.
இந்நிலையில் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
முன்னதாக இவர் பருத்தித்துறை நகரசபையில் சில மாதங்கள் நகரபிதாவாக கடமையாற்றியுள்ளார்.