Search
Close this search box.
நுவரெலியாவில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து; 30ற்கும் மேற்பட்டோர் காயம் .

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விபத்தில் சிக்கி 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்,

இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Sharing is caring

More News