Search
Close this search box.
கொழும்பு தேசிய நூலகத்தில் திடீர் தீ விபத்து

கொழும்பு 07இல் அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்துக்கு அருகில் உள்ள அறையில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து இன்று (10.07.2024) காலை 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Sharing is caring

More News