யாழ். ( Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயளியொருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பணம் செலவளித்து குறித்த பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.