Search
Close this search box.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜூலை முதல் வாரத்தில் 43,000 க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்களை இலங்கை வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி வருடாந்தம் 1,053,332 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 89 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் போஹ்ரா சர்வதேச மாநாடு, 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மதப் பார்வையாளர்களை தீவு நாட்டிற்கு கொண்டு வருவதால், இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போஹ்ரா சர்வதேச மாநாடு, ஜூலை 7 ஆம் திகதி ஆரம்பமானதுடன் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Sharing is caring

More News