எதிர்வரும் இரண்டு வாரங்களில் 1300 புதிய வைத்தியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைத்தியர்களைநியமிப்பதன் மூலம் தற்போது நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.