உக்ரைனின் தலைநகரில் உள்ள சிறுவர் வைத்தியசாலை உட்பட பல நகரங்களின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து வழமைக்கு மாறான பகல்நேர தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உக்ரைன் தலைநகரில் உள்ள பிரதான சிறுவர் மருத்துவமனையான ஒக்மாடிட் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து புகைமண்டலம் வெளியாவதையும் இடிபாடுகளிற்குள் தேடுதல்கள் இடம்பெறுவதையும் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை சிறுவர்களை எவ்வாறு காப்பாற்ற முயன்றனர் என்பதை மருத்துவமனையின் பணியாளர்கள் விபரிப்பதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
நான் கடும் அச்சமடைந்தேன் ஆனால் உயிர் தப்பிவிட்டேன் அது பாரிய சத்தம் ஜன்னல்கள் சிதறின என மருத்துவமனையின் தாதியொருவர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை சமிக்ஞை ஒலித்ததும் சிறுவர்களை பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு சென்றோம் முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது சுவாசிக்க முடியவில்லை மருத்துவர்கள் குண்டு சிதறல்களால் காயமடைந்தனர் கதவுகளும் ஜன்னல்களும் உடைந்து விழுந்த ஒரு தாதிகடும் காயங்களிற்குள்ளானார்,என அந்த தாதி தெரிவித்துள்ளார்
எனது கைகள் இன்னமும் நடுங்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டான் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.