அரச அச்சகமா அதிபர், காவல்துறை மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.