Search
Close this search box.
தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையிலிருந்து (Sri Lanka) தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (08) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும்  நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “நாங்கள் முதல் கட்டமாக இஸ்ரேலுக்கு (Israel) அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக, இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இலங்கையில் நடத்துவதைப் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இவ்விளைவு ஏற்பட்டது.

எனவே நாம் தொடர்ந்தும் இஸ்ரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் எங்களுக்கு மீண்டும் விவசாயத் துறையில் பணியாளர்களை அனுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாளை இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணிக்காக செல்லும் 43 குழுவினர் சிறந்த முறையில் பணியாற்றுவதன் மூலம் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் செல்லக் காத்திருக்கும் 8000 பேருக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இன்று எங்களுக்கு ஒரு நற் செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஹோட்டல் பிரிவுக்கு திறமையான தொழிலாளர்களாக அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை தொடர்பான ஒப்பந்தங்கள் கூட பெறப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Sharing is caring

More News