Search
Close this search box.
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு வேண்டாம் : விடுக்கப்பட்ட கோரிக்கை

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறும் யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

ஆகவே சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவளி காற்றினால் அழிய கூடும் இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம். எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். தொடரந்து இழுவை மடியாலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும் கடற்றொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் கடந்த காலங்களில் சீன அரிசி வழங்கப்பட்டதாகவும் அறிகின்றோம். கடற்றொழில் மக்களுக்கு முழுமையாகவும் கிடைக்கப்பெறவில்லை. சிலர் இதில் இலாபம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

அரசியல் ரீதியாக பலர் இலாபம் அடைகின்றனர். இன்றும் தரம் குறைந்த பொருட்கள் வருகின்றன. மேலும் கடற்றொழிலாளர்களாகிய எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு வழங்கவேண்டும். இழுவைமடியினால் ஏற்கனவே எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

தங்க நகைகளை அடகு வைத்தே எமது குடும்பங்கள் முதலீடு செய்கின்றன. வங்கியிலும் நகைகள் ஏலத்தில் விலைப்படுகின்ற சூழல் ஏற்படுகின்றது. எமது சுழிபுரம் கடற்கரையில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நேரத்தில் சமுர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்னும் பாதிப்பினை எதிர்கொள்ள பலர் இதனை அனுபவிக்கின்றனர். உண்மையில் எமக்கு இந்த சீன அரசு ஏமாற்றாது தரமான பொருட்களையும் திட்டங்களையும் வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர்.

இன்றைவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை.பலரும் உதவி வருகின்றது என கேள்வி எழுப்புகின்றார்கள் ஆனால் இதுவரை எமக்கு உதவி வழங்கபடவில்லை.

அரிசி தருவதாக கூறினார்கள் அதிலும் தர பிரச்சினை அரசியல் ரீதியாக தங்களுடைய காரியாலயங்களில் வைத்து எங்களுடைய மக்களை பார்கவில்லை. அரசியல் வாதிகள் பொதுமக்களை கவனிக்கவேண்டும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு எட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News