அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால் எதிர்காலத்தில் துரதிஷ்டமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே தரமற்ற அழகுசாதனப்பொருட்கள் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்களில் அதிக செறிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அண்மையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.