Search
Close this search box.
போதையூட்டும் மூலிகைச் செடியால் வந்த விபரீதம் – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர்.

வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவர் அந்த விதைகளை உட்கொண்டபோது அவருக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த   சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு  தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன், சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை  உட்கொண்டதில் 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள்  மயக்கமடைந்துள்ளனா்.

அவர்களை உடனடியாக அம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலைப்  பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News