Search
Close this search box.
சென்னை – அநுராதபுரம் இடையில் கடலுக்கு அடியில் மின் இணைப்பு: இறுதி கட்டத்தில் பேச்சுகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின் இணைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முதல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின் இந்தத் திட்டம் தொடர்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இத்திட்டத்தை கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் செயல்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் அண்மையில் புதுடில்லிக்குச் சென்ற ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் தலைமை செயலாளருமான சாகல ரத்நாயக்க முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தற்போது திட்டத்தை இருநாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தும் இறுதிகட்ட பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தீவில் முக்கியத்தும் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் வருட இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன் அரசாங்கத்தின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் பல பிரமாண்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதன் ஒருகட்டமாக இந்திய அரசாங்கத்தின் பிரமாண்ட திட்டங்களை செயல்பாட்டு வடிவத்துக்கு கொண்டுவர அரசாங்கம் ஆலோசித்துள்ளது.

மின் இணைப்புத் திட்டத்தை சென்னைக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் செயல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 200 ஜிவாபோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Sharing is caring

More News