கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற்கரையில் எண்ணெய் மற்றும் தார் போன்ற அடையாளம் தெரியாத மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தார் பந்து போன்ற பொருள் என்ன என்பது இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், இது கப்பலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் நேற்று இந்த எண்ணெய் மற்றும் தார் பொருட்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.