2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனவே உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.