Search
Close this search box.
பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து சுமார் பதினைந்து கிலோகிராம் எடையுள்ள கட்டியை வைத்தியர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் சமந்தா சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.

வீரகத்தியில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் கருப்பையில் இருந்த கட்டியே சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இப்பெண் பல வருடங்களாக இரைப்பை அழற்சி என சந்தேகிக்கப்படும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் வயிறு வீக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரிடம் வந்துள்ளார்.

மருத்துவர் அவரது நிலையை இரைப்பை அழற்சியை விட ஃபைப்ராய்டு என்று கண்டறிந்தார்.

இந்த பெண்ணின் வயிறு ஐந்து இரட்டைக் குழந்தைகள் உள்ளதைப் போல பெரிதாகியுள்ளது.

கருப்பையில் உள்ள திசுக்களின் வீக்கம் மற்றும் முடிச்சு காரணமாக இந்த நிலை ஏற்படுவதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட பெண் இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெறவில்லை என்றால், அவர் இறந்திருப்பார் என்று அவர் கூறினார்.

பெண்கள் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டால் உடனடியாக சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சிறப்பு மருத்துவர் சமந்தா சமரவிக்ரம அறிவுறுத்தியுள்ளார்.

Sharing is caring

More News