இன்று (04) முதல் மீண்டும் யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினருக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.