Search
Close this search box.
அரச அதிபர்களுக்கு நியமனக் கடிதம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் ​நேற்று (03) நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

இருவரும் இன்று (04) மாவட்ட செயலகங்களில் தமது கடமையை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring

More News