நேற்று (03) இரவு சுற்றிவளைப்பு ஒன்றுக்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.