இலங்கை மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்கள் பத்திர மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்து உடன்படிக்கை ஒன்றுக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பான இணக்கப்பாடு நேற்று (03) எட்டப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச கடன் பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.