Search
Close this search box.
இல்லாத கூட்டமைப்பிற்கு தலைவரை தெரிவு செய்த மாவை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸை (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக  மாவை சேனாதிராஜா (S. Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள  இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (02.07.2024) நடைபெற்ற மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சிதனியாக பிரிந்து சென்றதன் பின்னரும் இன்றுவரை தமிழரசுக் கட்சி தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வருவது அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தனியாக பிரிந்து சென்றதன் பின்னர் கூட்டமைப்பிலிருந்த ஏனைய பங்காளிகட்சிகள் தமக்குள் ஒரு புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையிலே தமிழரசுக் கட்சி தனி ஒரு கட்சியாக இருந்து கொண்டு தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் அதற்கு தலைவரை தெரிவு செய்ய உள்ளதாக மாவை சேனாதிராசா கூறுவது அர்தமற்ற ஒருவிடயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Sharing is caring

More News