Search
Close this search box.
வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்…! நுவரெலியாவில் பரபரப்பு…!

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் பிரதான வீதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று(02) மீட்கப்பட்டுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முதியோர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை,  இச்சம்பவம் தொடர்பான திம்புல பத்தனை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News