தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இன்று காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நாளைய தினம் மாலை இரண்டு மணி முதல் நான்கு மணிவரை இரா சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்ற முன்றலில் அஞ்சலிக்க்காக வைக்கப்படும் என சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
அதே வேளை சம்பந்தனின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணை விரைவில் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.