Search
Close this search box.
யாழில் பாரிய பணமோசடி: மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், யாழ். மானிப்பாய் (Manipay) பகுதியை சேர்ந்த குறித்த பெண் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில்,  காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Sharing is caring

More News