Search
Close this search box.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பூசாரி உட்பட 5 பேர் கைது!

ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் ஈடுபட்ட போது புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பகுதியிலிருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Sharing is caring

More News