Search
Close this search box.
காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய இளைஞன் கயிறு இறுகி மரணம்: வவுனியாவில் துயரம்

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்குப் பயம் காட்டக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரைக் காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞன் ஞாயி்ற்றுக்கிழமை (30) தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காகக் கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring

More News