மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.