தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.