Search
Close this search box.
வவுனியாவில் துணிகரம்…! வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு…!

வவுனியாவில் (Vavuniya) வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஒரு பவுண் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் (Chidambarapuram) பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring

More News