Search
Close this search box.
நாளை 15 மணிநேர நீர் வெட்டு – வெளியான அறிவிப்பு.

கொழும்பின் (Colombo) பல பகுதிகளில் நாளை (29.06.2024) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைமையின் புனரமைப்புப் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனாலேயே, நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Sharing is caring

More News