Search
Close this search box.
உடன் வெளியேறுங்கள்: கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லெபனானில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனேடியர்கள், லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்வது உசிதமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லெபனானில் தங்கியுள்ள கனேடியர்கள் வர்த்தக விமானங்களின் ஊடாக அங்கிருந்து வெளியேறுவது பொருத்தமானது என அறிவித்துள்ளார்.

லெபனானில் ஆயுதப் போராட்டம் வெடித்தால் அங்கு வாழ்ந்து வரும் கனேடியர்கள் வெளியேறுவதற்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே லெபனானை விட்டு வெளியேறுமாறு கனேடிய பிரஜைகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்ளும் போது அரசாங்கத்தின் பயண எச்சரிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Sharing is caring

More News