திருகோணமலை (Trincomalee) – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
இதேவேளை குறித்த வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை – கண்டி (Kandy) பிரதான வீதியின் 98ஆம் கட்டை பகுதியில் நேற்று (27) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் (Colombo) இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரே விபத்தில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.