Search
Close this search box.
ஐரோப்பிய நாடுகளில் பரவும் E. coli தொற்று- சாலட் உட்கொண்ட ஒருவர் பலி!

கறை படிந்த சாலட் இலைகளுடன் தொடர்புடைய ஈ.கோலை நோயால் ஒருவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பிரித்தானிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் வயது அல்லது இருப்பிடம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சுகாதாரத் தலைவர்கள் அவர்களுக்கு அடிப்படை மருத்துவ நிலை இருந்த நிலையில், உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின்  புதுப்பில், ஜூன் 25 ஆம் திகதி வரை ஷிகா நச்சுத்தன்மையை உருவாக்கும் ஈ.கோலை  தொற்றால் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது மொத்த வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 250ஐக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 122 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

E. coli தொற்று கறை படிந்த கீரை இலைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த மாத தொடக்கத்தில் 11 பெரிய கடைகளில் விற்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட சாண்ட்விச்கள், ரேப்கள் மற்றும் சாலடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சாப்பிட வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News