நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலமே பொருளாதார நெருக்கடி முடிவடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதுடன் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு கடன் வழங்குபவர்களை சம்மதிக்க வைத்தது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேவைக்கு ஏற்ப மீண்டும் சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே இதனைக் தெரிவித்தார்.