பின்லாந்தில் (Finland) இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனலை (YouTube channel) நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.