மன்னார் சௌத்பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் சவுத்பார் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கஜபா அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.அங்கு தொண்ணூற்றெட்டு (98) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 46 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.