வதிவிடப் பத்திரம் வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 25000 ரூபா இலஞ்சம் பெற்ற கங்காவத்தை கோரளை பிரதேச செயலகத்தின் ஹிரஸ்ஸ கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கண்டி ஹந்தான வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தான் வசிக்கும் வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்காக மின்சார சபைக்கு வழங்க வேண்டிய வதிவிட சான்றிதழை கிராம உத்தியோகத்தரிடம் கோரியுள்ளார்.
மேலும் அவ் கிராம உத்தியோகத்தர் அந்த நபரிடம் 25000 ரூபா பணத்தொகையை தருமாறும் அதன் பின் வதிவிட பத்திரம் தருவதாகவும் கூறியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தர் வதிவிடப் பத்திரத்தை வழங்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து குறித்த கிராம உத்தியோகத்தரது அலுவலகத்திற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.