Search
Close this search box.
மதுபானசாலைக்கு எதிர்ப்பு; பெண்கள் உட்பட பலர் கைது-தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். கைதானவர்களில் 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

Sharing is caring

More News