மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டிலுள்ள குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 22 மாணவர்களும் எட்டு மாணவிகளும் மற்றும் ஆசிரியரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.