Search
Close this search box.
மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட அங்குள்ள நகர் பகுதியில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

இது குறித்த செய்திகள் அண்மைய நாட்களாகவே வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஐஸ்கிறீமில் உயிரிழந் தவளை, நாய் இறைச்சி கொத்து, பாணில் இரும்புத் துண்டு, உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் இருப்பது என அண்மைய நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருகின்றன.

அதுபோன்ற செய்தி ஒன்றே தற்போது வெளியாகியுள்ளதுடன், பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் நேற்றைய தினம் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தில் நேற்று இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring

More News