கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.